பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்கின்றனர் .ஆனால் இந்த வித்தையை அனுபவத்தில் கண்டு வந்தவர் திரு முத்து பாண்டி வைத்தியர் அவர்கள். இந்த பஞ்ச பட்சி வித்தை மாந்திரீகத்திற்கு மட்டும் தான் பயன் படுத்த முடியும் என்று நினைக்கின்றனர் ஆனால் அதுதான் இல்லை .
![]() |
சித்த மருத்துவத்தில் பஞ்ச பட்சி
பஞ்ச பட்சி சாஸ்திரம் சித்தமருத்துவத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றது இந்த ஐந்து பட்சிகள் என்பது மக்களுக்கு அந்த சாஸ்திரத்தை புரிய வைப்பதற்காக குறிபபிட்டிருக்கிரார்கள்.
எல்லோரும் இந்த ஐந்து பறவையையும் அது உண்ணும் மூலிகையும் தெரிந்து கொண்டு பட்சி சாஸ்திரம் தெரியும் என்று பிதற்றிக்கொண்டிருக்கிரார்கள் அதன் கால அளவுகளையும் தெரிந்து கொண்டு எனக்கும் தெரியும் என்று கூறுகின்றனர் .
இந்த பட்சி சாஸ்திரமும் பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையிலே செயல் படுகிறது இதை வைத்து நோய் கண்டறிய அதை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் பயன் படுகிறது .
ஜோதிடத்தில் பஞ்ச பட்சி
அடுத்து இந்த பட்சி சாஸ்திரத்தை வைத்து ஒருவனின் தலைஎழுத்தையே கூற முடியும் .ஒருவன் பிறந்த நேரம் எந்த பட்சி ஆட்சியாக இருந்தது அவனுக்குரிய பட்சி என்ன செய்தது
இப்பொழுது உள்ள கோட்சார பலன் கூட கூற முடியும் அவன் வருகையை கவனித்து அவன் எந்த பட்சி சமயத்தில் வந்தான் அவன் என்ன வார்த்தை கூறினான் என்று கணித்து எதற்காக வந்திருக்கிறான் என்று துல்லியமாக கூற முடியும்
மாந்திரீகத்தில் பஞ்ச பட்சி
மாந்திரீகத்தில் யந்திர முறைகளை கொண்டு செய்ய முடியாததை இந்த பட்சி சமயத்தை கணித்து அதற்கான மூளியை அந்த சமயத்தில் பிடிங்கி அதற்குரிய யந்திரத்தை உருவேற்றி புதைத்தால் அந்த காரியம் உடனடியாக நடக்கும் இதிலும் முழுக்க பஞ்ச பூத தத்துவங்களே செயல்படுகின்றன .
இந்த பஞ்ச பூத தத்துவத்தை சரியாக அறியாதவர்களால் இக்கலையை செயல்படுத்த முடியாது ,அதையும் மீறி செய்தால் தோல்வியும் எதிர் விளைவுகளும் ஏற்படும் என்பது உறுதி .
panja patsi sasthiram ,maanthirikam, vasiyam,
Very good rare
ReplyDeleteinformation