Tuesday, 28 July 2015

மூலிகை சாப நிவர்த்தி வேறொரு முறை

மூலிகை அருகில் சென்று மூலிகை இருக்கும் இடத்தை   சுத்தம்   செய்து     கொள்ள வேண்டும். பின்பு தேங்காய்வாழைப்பழம்சூடம்பத்திசாம்பிராணிவெற்றிலை பாக்குஅவல்பொறிகடலைஇளநீர்கல்கண்டுவிபூதிசந்தனம்குங்குமம்பொங்கல்இவைகளை தல வாழையிலையில் வைத்து ஆரம்பிக்க வேண்டும். முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு வெள்ளை நிறமுள்ள நூலில் மஞ்சள் தடவி பின்பு ஒரு விரல் மஞ்சள் கோர்த்து தாலி கட்டுவது போல் மூலிகையின் மீது கட்டவும். பின்பு தேங்காயுடைத்து குரு மந்திரம் 33  தடவை கூறவும் பின்பு விநாயகர் மந்திரம் 108 முறை கூறவும். பின்பு நம் குல தெய்வத்தையும்நம் முன்னோர்களையும் வணங்கி மூலிகை சாப நிவர்த்தி மந்திரத்தை 1008 முறை கூறி முப்பலி கொடுத்து இரும்பாலாகிய ஆயுதம் படாமல் ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுக்கவும்.

சாப நிவர்த்தி மந்திரம்

ஓம் சர்வ மூலிகையே உன் சாபம் சாபம் நசி மசிபரமசிவன் சாபம் நசி மசி. பார்வதி சாபம் நசி மசிஅகஸ்தியர் சாபம் நசி மசிசப்தரிஷி சாபம் நசி மசிகோடான கோடி ஜீவ ராசிகளின் சாபம் நசி மசிஏனையோர் சாபம் நசி மசிசகலமும் எனக்கு வசி வசி வசியமாக சுவாஹா”  

ஓம் மூலி சர்வ மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா

சாப நிவர்த்தி சில சூட்சுமங்கள்

1.தன்னுடைய பட்சி அரசிலும்சுப ஓரையிலும் எடுக்க வேண்டும்.
2.ஞாயிற்றுக்கிழமைஅமாவாசைசந்திர சூரிய கிரஹணம்இப்படிப்பட்ட நாட்களில் எடுக்க வேண்டும்.
3.இல்லையெனில் தாரா பலன் நட்சத்திரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும். இது 100% மிகச்சிறந்த பலனைத்தரும்.
4.நிர்வாணமாக இருந்து எடுக்க வேண்டும்.
5.சுண்டுவிரல் நகம் படக்கூடாது.
6.படையல் சரியாக வைக்கவும்.
7.விரல் மஞ்சள் வைத்து தான் காப்பு கட்ட வேண்டும்.
8.பிரம்ம முகூர்தத்தில் தான் எடுக்க வேண்டும்.
9.அரைஞாண் கயிறு இருக்கக்கூடாது.
10.முப்பலி கொடுத்துதான் எடுக்க வேண்டும்.(தேங்காய்வெண்பூசணிஎழுமிச்சம்பழம் இவைகளில் குங்குமம் தடவி மூலிகையின் மீது படும்படி செய்யவும்).

No comments:

Post a Comment